கவிதைச்சோலை! - நட்பு!
இன்று நண்பர்கள் தினம்... பழக்க தோஷத்தால்ஆண்டு தவறாமல் வாங்குகிறேன்வாழ்த்து அட்டைகளை...ஆயினும், அனுப்பும் முகவரிதெரியாததால், அவையெல்லாம்குவிந்து கிடக்கின்றன என்னிடமே!நட்பு... -நினைவுகளில் நெருடுகின்றனநிறைய முட்களும்கொஞ்சம் பூக்களும்!பால்ய கால நட்பெல்லாம்பள்ளி இறுதி நாளொன்றில்பசுமை நிறைந்த நினைவுகளேபாடியதோடு கலைந்து போயிற்று!கல்லுாரி கால நட்போ கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாககத்தை கத்தையான கடிதங்களில் செழித்து வளர்ந்து நலம்; நலமறிய அவா எனும்கார்டு கிறுக்கல்களில் குறுகியது!அப்புறமான நாட்களில்கார்டுகளும் காலாவதியாகிஆண்டுக்கொரு முறை பொங்கல் வாழ்த்து அட்டைகளாய் சுருங்கி கடைசியில் வேலை கிடைத்ததும்கரைந்து காணாமலே போயிற்று!அலுவலக நட்பெல்லாம்அசட்டுப் புன்னகைகள்அவ்வப்போது கைகுலுக்கள் தவிர்த்துஆழமாய் வேர் பிடிப்பதில்லை மனதில்!இலக்கற்று ஓடிக் கொண்டிருக்கும்இயந்திர வாழ்க்கையில்நெஞ்சார்ந்து நட்புப் பாராட்டநேரமிருக்கிறதா நமக்கு?சோ.சுப்புராஜ், சென்னை.