கவிதைச்சோலை! - புத்தாண்டு 2023
பொங்கி வரும்பூம்புனல் வெள்ளமாய்பிறக்கட்டும் புத்தாண்டுதுயரங்கள் விலகிமகிழ்ச்சி நிலைத்திடமலரட்டும் புத்தாண்டு!பசுமை போர்த்தியநன்செய் வயலாய்சிறக்கட்டும் புத்தாண்டுபகைமை கழண்டுநட்பே சேர்ந்திடஒளிரட்டும் புத்தாண்டு!திறமையுடையோர்திக்கெட்டும் சாதிக்கவழி விடட்டும் புத்தாண்டு...மனிதம் கொண்டோர்கருணையோடு காத்திடகை கொடுக்கட்டும் புத்தாண்டு!வேலையின்மையை துரத்திவாட்டும் வறுமையை விரட்டிவளமாக்கட்டும் புத்தாண்டுநெருக்கடிகளை களைந்துமிரட்டும் அச்சம் அகற்றிஇன்பமாகட்டும் புத்தாண்டு!சமூகக் கொடுமைகளைவேரோடு சாய்த்திடசாட்டை வீசட்டும் புத்தாண்டுஎல்லாரும் ஓரினமாய்சமத்துவம் படைத்திடபாட்டை போடட்டும் புத்தாண்டு!புதுமைகள் பல கண்டுமனிதகுலம் மேம்படஉதவி செய்யட்டும் புத்தாண்டுஎதிர்கால தலைமுறைநினைவில் கொண்டிடநல்லன வழங்கட்டும் புத்தாண்டு!அ.ப. சங்கர், தலைக்குளம், கடலுார்.