கவிதைச்சோலை! - புதிய பாதையில்...
கால தேவனின் பிரஜைகள் நாம்வழி போக்கர்களாகபூமிக்கு வந்தவர்களைவிருந்தாளியாய் ஏற்றுக்கொண்டாள்பூமித்தாய்!வழி போக்கர்கள்விருந்தாளிகளாய் மாறியதும்உண்ட வீட்டுக்குஇரண்டகம் செய்ய விழைந்தோம்!மேதினி பொருட்கள் யாவும்எனதென்று எண்ணிமன்னாதி மன்னர்களாககளித்து வாழ தலைப்பட்டோம்!சுயநலமாய் சுரண்டி சுரண்டியேஎண்ணிலா ஆண்டுகள் போயின...பரிகாரம் தேட இதோபுதியதோர் ஆண்டு பூத்தது!இன்னும் எத்தனை காலம் தான்அசோகர் மரம் நட்டார்சோழ ராஜாக்கள் கோவில் கட்டிஅறம் வளர்த்தாரெனமுன்னோர் புராணம் பாடுவது!ஊரெல்லாம் செழிக்கஉயிரெல்லாம் களிக்கபுதுமை மிகு சமுதாயம் உருவாகபாரெல்லாம் நம் புகழ் பரவபுது நாற்று நடுவோம்!முளைக்க வைக்கும்வீரிய முயற்சியிலேயேசுற்றியிருக்கும் களைகளின்வேர்கள் அழிந்து போகட்டும்!முன்னோர் காட்டியநல் வழியில் செல்லவாருங்கள் கைக்கோர்ப்போம்...என்னாளும் மறையாதிருக்கும்சுவடுகளை விட்டுச் செல்வோம்!பூமி தனக்கே சொந்தமென்றஇறுமாப்பு இனி எதற்கு...பூமிக்கு நீ சொந்தமெனவருங்காலம் கொண்டாடட்டுமே!மண்ணிலும், விண்ணிலும்நம் நாசக் கரங்கள்இன்னும் நீளத்தான் வேண்டுமா...பூமித் தாய் சற்று இளைப்பாறட்டும்!நம்மோடு உலகம் முடிவதில்லைஇன்னும் பலர் வரவேண்டியுள்ளது...பூமாதா அவர்களுக்கும்விருந்தளித்து மகிழட்டுமே!இயற்கை நம்மை வாழ்த்தவும்வானம் வான வில்லால்வரவேற்பு வளையம் வைக்கவும்துளி பங்களிப்பையாவது தரபுதிய பாதையில் பயணிப்போம்வாரீர் வாரீர்!செல்வி நடேசன், சென்னை.