உள்ளூர் செய்திகள்

பி.வி.சி. டியூபில் உடை

அமெரிக்காவில், மிகவும் பிரபலமான , 'டிவி' நடிகை, கர்ட்னி ஸ்டட்டன். 'பிக்பாஸ்' உள்ளிட்ட, ஏராளமான, 'டிவி' நிகழ்ச்சிகளில், இவர் பங்கேற்றுள்ளார். சமீபத்தில், லண்டன் சென்று, நீண்ட நாட்கள் அங்கு தங்கியிருந்த கர்ட்னி, சில நாட்களுக்கு முன், அமெரிக்கா திரும்பினார். இந்த இடைவெளியில், ஆளே, சுத்தமாக மாறிப் போய் விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள, சர் ரெஸ்டாரெண்ட் என்ற ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக வந்திருந்த, கர்ட்னியை பார்த்து, அங்கு வந்திருந்த அனைவரும், ஆச்சர்யத்தில் வாய் பிளந்தனர். வழக்கமான உடைக்கு பதிலாக, நீல நிற, பி.வி.சி., டியூபில் தயாரான உடையை அணிந்து வந்திருந்து, அனைவரையும், மயக்கம் அடையச் செய்தார். அதேபோல், கழுத்திலும், தங்க நிறத்திலான, வளையத்தை அணிந்திருந்தார். ' ஏன் இந்த விபரீத முடிவு' என, அவரிடம் கேட்டபோது, 'ஒரே மாதிரியான உடைகளை அணிந்து போராடித்து விட்டது. அதனால், சும்மா ஒரு சேஞ்ச்சுக்காக, இப்படி ஒரு உடையை வடிவமைத்தேன்...' என்கிறார், கர்ட்னி. இவர், இதுபோன்ற பரபரப்பை ஏற்படுத்துவது, இது முதல் முறையல்ல. இவருக்கு, 19 வயது தான் ஆகிறது. ஆனால், 53 வயதுடைய, டக் ஹட்சிசன் என்ற நடிகரை திருமணம் செய்து, ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தினார்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !