உள்ளூர் செய்திகள்

ரோபோ வழிகாட்டி!

உடல்நலக் குறைவு ஏற்பட்டால், மருத்துவமனைக்கு செல்வோம். ஆனால், உள்ளே நுழைந்தால், எந்த வழியில் செல்ல வேண்டும், எந்த நோய்க்கு எந்த மருத்துவரை பார்க்க வேண்டும் என்று அறியாமல் குழம்புவர், சிலர்.இந்த குழப்பத்தை தவிர்க்க, கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், 'ரோபோ' வழி காட்டியை, இப்பணிக்கு நியமித்துள்ளனர். பெங்களூரு, 'இன்வென்டோ ரோபோடிக்ஸ்' நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட இந்த இயந்திர மனிதனுக்கு, 'காரித்தாசியன்' என, பெயரிடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வருபவர்கள், எங்கு, யாரை சந்திக்க வேண்டும், எந்த நோய்க்கு எந்த மருத்துவரை காண வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளிப்பதுடன், அந்தந்த இடத்துக்கும் அழைத்துச் செல்கிறது.'ரோபோ'வின் முன் பகுதியில், 'ஸ்கிரீன்' இருக்கிறது. அந்த, 'டச் ஸ்கிரீனில்' மருத்துவமனைக்கு வருபவர்களின் அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஒருமுறை மருத்துவமனைக்கு வந்தவர், அடுத்த முறை வரும்போது, கேள்வி கேட்கும் முன், அடையாளம் கண்டு, சேவை செய்யும் வகையில் வடிவமைத்துள்ளனர்.இந்த, 'ரோபோ' வழிகாட்டி, மிகவும் பயனுள்ளதாக உள்ளதால், மற்ற மருத்துவமனைகளிலும் பொருத்த திட்டமிட்டுள்ளனர்.ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !