உள்ளூர் செய்திகள்

சங்கீத குடும்பம்!

பழசிராஜா என்று ஒரு மலையாள படம், 55 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி, பிரபலமானது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு இசை அமைத்தவர், ராஜகோபால குலசேகரன். இவர் இசை அமைத்த பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன. பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை தான் இவர். காஞ்னா, 11, திலீப், 9, பால, 6 மற்றும் ரேகா, 2, வயதுக்குட்பட்ட குழந்தைகளை தவிக்க விட்டு இறந்து போனார். அவர் குடும்பத்துக்கு, ஆறுதல் அளிக்க, சினிமா துறையிலிருந்து, இருவர் தான் ஆதரவாக இருந்தனர். ஒருவர், பாடலாசிரியர், ஸ்ரீகுமரன் தம்பி; மற்றவர், இசை அமைப்பாளர், எம்.கே.அர்ஜுனன்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !