அறிஞர்களின் சிலேடை பேச்சுக்கள்!
தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழமையான கோவில் ஒன்றை பார்வையிட சென்றார், காமராஜர். 'இந்த கோவிலை கட்டியது யார்...' என்று, உடன் வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்களுக்கு அதுபற்றி தெரியவில்லை.சிரித்துக்கொண்டே, மேலே இருந்த, 'டியூப் லைட்'டை சுட்டிக்காட்டிய காமராஜர், 'இவ்வளவு காலம் நிலைச்சு நிற்கிற இந்த கோவிலை கட்டியவர் யாருன்னு தெரியலே... ஆனா, ஒரு மாதம் கூட ஒழுங்கா எரியாத இந்த, 'டியூப் லைட்'ல, உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்க பாருங்களேன்...' என்றார்.ஒருமுறை, தமிழக சட்டசபையில், 1967 துவக்கத்தில் இருந்த விலைவாசிகள், தி.மு.க.,வின் ஓராண்டு ஆட்சிக்கு பின், எவ்வாறெல்லாம் விலை சரிந்து வந்துள்ளன என்பதை சுட்டிக் காட்டினார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த உறுப்பினர், வினாயகம் எழுந்து, 'புளி விலை குறைந்து விட்டது என்றனரே, யார் முயற்சியில் குறைந்தது...' என்று, நையாண்டியாக கேட்டார். உடனே, சிரித்த முகத்துடன், 'புளிய மரத்தின் முயற்சியால்...' என்றார், அண்ணாதுரை.