உள்ளூர் செய்திகள்

ஆடை குறைப்பிற்கு காரணம், சீதை!

ஒடிசா மாநிலம், மால்கான்கிரி மாவட்டத்தில், 'போண்டா' என்ற பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். போண்டா இன பெண்கள், அரைகுறை ஆடைகளில் தான் காட்சியளிப்பர். முக்கியமான பகுதிகளை, பல நிற முத்துக்களால் நீளமான மாலைகள் அணிந்து மறைத்திருப்பர். இவர்களின் ஆடை குறைப்புக்கு பின்னணியில், ராமாயண சீதை இருந்ததாக கூறப்படுகிறது. வனவாசம் மேற்கொண்டபோது, காட்டு அருவியில், சீதாதேவி குளித்ததை, பழங்குடி இளைஞர்கள் பார்த்து ரசித்தனர். இதைப் பார்த்து, சீதா மனம் வருந்தி, 'உங்கள் இன பெண்கள், நிர்வாணமாக திரியட்டும்...' என்று, சாபமிட்டதாகவும், அதிலிருந்து இப்பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதாகவும் ஒரு கதை நிலவுகிறது. போண்டா இன பெண்கள், தங்களை விட இளம் வயது ஆணை தான் மணப்பர். தங்களுக்கு வயதானால், இளம் கணவர்கள், தங்களை நன்றாக பராமரிப்பர் என்ற நம்பிக்கை தான், இதற்கு காரணமாம்.—ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !