புகையில்லாத பீச்!
ஐரோப்பிய நாடான, இத்தாலியில் உள்ள கடற்கரையை ஒட்டிய கிராமம், பிபியோனி. இங்கு, கோடை காலத்தில், சுற்றுலா பயணியர் குவிவர்.இந்த ஆண்டு, மே 1ம் தேதி முதல், இந்த கடற்கரையில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கடற்கரைக்கு வருவோர், நல்ல காற்றை சுவாசிக்க வருகின்றனர். ஆனால், சுவாசிப்பதோ, 'குப் குப்' சிகரெட் புகை நாற்றத்தை தான். இது, சுற்றுலா பயணியரை பாதிப்பதால், புகை பிடிப்போருக்கு, 'வேட்டு' வைத்து விட்டனர்.இப்படி, இந்தியாவின் பிரபலமான கடற்கரைகளிலும், புகை பிடிக்க தடை விதிக்கலாம்.