இது உங்கள் இடம்!
புண்பட்ட உள்ளத்தை ரணமாக்கலாமா?தவிர்க்க முடியாத காரணங்களால், விவாகரத்து பெற்ற என் தோழி, குழந்தையுடன், போராட்ட வாழ்வை வாழ்ந்து வருகிறாள். சுற்றிலும், படித்த பெண்களே குடியிருக்கும் பகுதியில் வசித்த போதும், அச்சிறு குழந்தையிடம், 'அப்பா மோசமா, அம்மா மோசமா, உனக்கு யாரை பிடிக்கும், எதற்காக இருவரும் பிரிந்தனர்?' என, அடுக்கடுக்காய் கேள்வி கேட்டு, அக்குழந்தை, யாரையும் பார்த்து பேசவோ, விளையாடவோ முடியாதபடி செய்கின்றனர்.தன்னம்பிக்கை குறைந்து, அனைவரையும் ஒரு வித பயத்தோடும், ஆர்வமின்றியும் அணுகுகிறாள் அக்குழந்தை. இதை, தவறு என சுட்டிக் காட்டிய என் தோழியை, 'எங்களிடமே இவ்வளவு வாயாடும் நீ, உன் புருஷனை என்ன பாடுபடுத்தினாயோ?' என நேருக்கு நேர் கேட்டு, வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகின்றனர்.நம் குடும்பத்தில், ஒரு பெண்ணிற்கும், குழந்தைக்கும் இந்த கதி நேர்ந்திருந்தால், இப்படியா நடந்து கொள்வீர்கள் தோழியரே... தயவு செய்து சிந்தியுங்கள்.— ந.லட்சுமி, நெல்லை.சூப்பர் ஐடியா!சமீபத்தில், நாளிதழில் படித்த செய்தியில், 'நோ பார்க்கிங்'ல் வண்டியை நிறுத்திய டிரைவரை, தோப்புக் கரணம் போடச் சொல்லி, தண்டனை கொடுத்த போலீஸ் காரர் பற்றி படித்தேன்.இவரின் இந்த, 'பனிஷ்மென்ட்' ஐடியா சூப்பர். இதே போல், போக்குவரத்து விதிகளை மீறும் அன்பர்களுக்கு, சில பனிஷ் மென்டுகளை தரலாம். அதாவது, பொது இடத்தில் தோப்புக்கரணம் போடுதல், டிராபிக்கை ஒழுங்குபடுத்துதல், துப்புரவு பணியை மேற்கொள்ள செய்தல் என, தண்டனைகள் வழங்கினால், தவறுகளும், விதி மீறல்களும் குறைய வாய்ப்புண்டு.என்ன காரணத்துக்காக செல்கின்றன@ரா, அந்த வேலை பாதிக்கக் கூடாது என்பதற்காகவும், மற்றவர்கள் பார்க்கும் அளவிற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதே என்ற அவமானம் கருதியும், இனி ஒழுங்கான பயணத்தை மேற்கொள்வர். மேலும், அபராதம் செலுத்தியோ அல்லது லஞ்சம் கொடுத்தோ, தப்பிக்க எண்ணுபவர்கள், வேறு வழியின்றி அந்த @நரத்துக்கு @மம்@பாக்காக மாறுவ@ற தவிர, நிரந்தரமாக மாற வா#ப்பில்லை.— என்.சுமித்திரா, மதுரை.நண்பரின் அணுகுமுறை!அலுவலக வேலையாக, நண்பரின் வீட்டில் இரவு தங்க நேர்ந்தது. அதிகாலை நான்கு மணி போல் அலாரம் அடித்ததில் விழிப்பு ஏற்பட்டது. நண்பர் இதை கண்டு, 'சாரி நண்பா, பையன் பொது தேர்வுக்கு படிக்கிறான். நீ தூக்கத்தை கன்டினியூ பண்ணு...' என்றார்.மீண்டும் தூக்கம் வராமல் இருக்கவே, எழுந்து ஹாலுக்கு வந்தேன், பையன் படித்துக் கொண்டிருந்தான். நண்பர் நாற்காலியில் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் மனைவி, சமையலறையில் அவசரமில்லாமல், நிதானமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.நண்பரும், அவர் மனைவியும் அதிகம் படிக்கவில்லை என்பதால், மகன் படிப்பிற்கு உதவியாக இருக்க வாய்ப்பில்லை. நண்பர் இரவு வேலை பார்த்து வந்து, பின் இரவில், உறங்குபவர். எனவே, நண்பரிடம், 'பையன் தான் படிக்கிறானே, நீங்கள் ஏன் விழித்திருக்க வேண்டும்?' எனக் கேட்டேன்.அதற்கு நண்பர், 'அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தை விட்டு எழுந்து, வேலை பார்ப்பது சற்று சிரமம்தான். இந்நிலையில், பையன் மட்டும் படிக்கும் போது, தனிமை உணர்வும், எல்லாரும் நிம்மதியாக உறங்கும் போது, தான் மட்டும் உறக்கத்தை விட்டு படிக்க வேண்டி உள்ளதே என, மனதில் நினைக்கலாம். எனவே நாங்களும் எழுந்து, வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும், கூடவே விழித்து இருப்பதால், பாதுகாப்பு உணர்வும், நமக்காக நம் பெற்றோர், தூக்கத்தைத் துறந்து, கஷ்டப்பட்டு விழித்திருக்கின்றனர் என்ற உணர்விலும், மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புடனும் படிப்பான்...' என விளக்கமளித்தார்.நண்பரின் அணுகுமுறை எனக்கும் பிடித்திருந் தது; அப்போ உங்களுக்கு?— பெ.சக்திவேல், முத்தியால் பேட்டை.