முன்னூறு வகையான இசைக்கருவிகள்!
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஜாய். இவர், 40 ஆண்டுகளாக, இசை கருவிகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.அத்துடன், பழமையான இசைக்கருவிகள் பற்றிய ஆராய்ச்சியும் செய்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு முன், பீட்டர் என்ற அமெரிக்கர், ஜாயின் கடைக்கு வந்து, பழமையான இசைக் கருவிகளின் பட்டியலைக் கொடுத்து, 'இவை வேண்டும்...' என்றார். அக்கருவிகள் பற்றி கேள்விப்படாத ஜாய், அதை தேடி, கேரளா முழுவதும் அலைந்தார். அப்போது, அவுப்பமண்ணா என்ற ஊரில், ஒரு வீட்டில், 500 ஆண்டுகள் பழமையான இசைக்கருவி ஒன்று கிடைத்தது. அதை இயக்க கற்றுக் கொண்ட பின், அதைபோன்ற கருவிகளை, தானே உருவாக்கினார்.இவர் கடையில் உள்ள அனைத்து கருவிகளையும், அவரே இசைத்து, இசைப்பிரியர்களை வியக்க வைக்கிறார். கேரளாவில் மட்டும், 300க்கும் மேற்பட்ட வெவ்வேறு வித இசைக்கருவிகள் இருப்பதாக கூறுகிறார் இவர்.— ஜோல்னாபையன்.