உள்ளூர் செய்திகள்

அழகு குறிப்பு!

* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் துாள், எலுமிச்சைச் சாறு, ஒரு மேஜைக்கரண்டி பால் கலந்து முகத்தில் பூசி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவினால் முகம் மிருதுவாகும் * பாதியாக நறுக்கிய ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஐந்து துண்டுகள் சேர்த்து, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அதில் சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்தில் பூசி, 30 நிமிடம் ஊற வைத்து கழுவலாம். இதனால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாகும். இதை, வாரம் ஒருமுறை செய்யலாம் * கருவளையத்தைப் போக்க, பூசணி சிறந்த மருந்தாகும். பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி, அதை கண்களை சுற்றி வைத்தால், கருவளையம் மறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !