பாலைவன வாசம்!
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக, 'பாலைவன வாசம்' என்ற பயணத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது, ராஜஸ்தான் மாநில அரசு.இரவில் பாலைவனத்தில் தங்குபவர்கள் மிக குறைவு. பகல் முழுவதும் கடுமையான வெப்பம், இரவில் கடும் குளிர் நிலவும். இந்த சூழலை அனுபவிக்க வாய்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது, மாநில சுற்றுலா துறை.இதற்காக, பாலைவனத்தில் அழகான கூடாரங்கள் அமைத்து, அதில், 'ஏசி' மற்றும் ஹீட்டர் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.— ஜோல்னாபையன்