இதப்படிங்க முதல்ல...
அரசியலுக்கு வரும் இயக்குனர், பா.ரஞ்சித்!அட்டகத்தி படத்தின் இயக்குனரான, பா.ரஞ்சித், ரஜினி நடிப்பில், கபாலி மற்றும் காலா படங்களை இயக்கி, பிரபலமானார். இந்நிலையில், சமீப காலமாக அவ்வப்போது, அரசியல் பேசி வரும், பா.ரஞ்சித், 'எதிர்காலத்தில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். அப்போது, தமிழக அரசியலில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்துவேன். அது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலாக இருக்கும். அதற்காக இப்போதே தயாராகி வருகிறேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையாமமிதா பைஜுவின், 'ரொமான்டிக்' ரவுண்டு!ம லையாளத்தில், பிரேமலு என்ற படத்தில் நடித்து, பிரபலமாகி, தமிழுக்கு வந்த, நடிகை மமிதா பைஜு, பிரதீப் ரங்கநாதனுடன் நடித்த, டியூட் படம் சமீபத்தில் வெளியானது. அடுத்தடுத்து முன்னணி, 'ஹீரோ'களுடன் நடிக்க வேண்டும் என்பதைவிட, 'இளவட்ட, 'ஹீரோ'களுடன், 'ரொமான்டிக்' ரவுண்டு வர வேண்டும்...' என்று ஆசைப்படுவதாக கூறுகிறார். இதையடுத்து, நடிகை மமிதா பைஜுவிடம், காதல் கதைகளுடன் படையெடுத்து வருகின்றனர், இயக்குனர்கள்.— எலீசாசிம்புவின் திருப்புமுனை படம்!தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில், அரசன் படத்தில் இரண்டு, 'கெட்-அப்'பில் நடிக்கிறார், சிம்பு. இப்படத்தின், ஐந்து நிமிட, 'டீசர்' தியேட்டர்களில் வெளியிடப்பட்டதை அடுத்து, இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், 'மணிரத்னம் இயக்கத்தில், ரஜினி நடித்த, தளபதி எப்படி அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்ததோ, அதேபோன்று இந்த, அரசன் படம் என் கேரியரிலும் ஒரு திருப்புமுனை படமாக அமையும்...' என்று கூறும் சிம்பு, தற்போது வடசென்னை தமிழை பேசுவதற்கும் பயிற்சி எடுத்துள்ளார்.— சி.பொ.,'ரீ-என்ட்ரி' கொடுத்த, காம்னா ஜேத்மாலினி!இ தயத் திருடன் மற்றும் மச்சக்காரன் உள்பட சில படங்களில் நடித்தவர் நடிகை, காம்னா ஜேத்மாலினி. கடந்த, 2014ல், தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து, செட்டிலானவர்.பத்து ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் தெலுங்கில் ஒரு படத்தில், 'ரீ-என்ட்ரி' கொடுத்துள்ளார். அதையடுத்து, தமிழிலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிப்பதற்காக படவேட்டை நடத்தி வரும், காம்னா, 'கிளாமர்' வேடங்களில் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக இளவட்ட இயக்குனர்களிடம் முன்மொழிந்து வருகிறார்.— எலீசாபிரதீப் ரங்கநாதனுக்கு மவுசு கூடுகிறது!ந டிகர், பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த, லவ் டுடே படம், 100 கோடி ரூபாய் வசூலித்தது. அதையடுத்து, அவர் நடித்த, டிராகன் படம், 150 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் தற்போது, அவர் நடித்து திரைக்கு வந்துள்ள, டியூட் படம் ஒரே வாரத்தில், 100 கோடி ரூபாயை கடந்து வசூலித்து வருகிறது. இப்படி அடுத்தடுத்து, 'ஹிட்' படங்களை கொடுத்து, 'ஹாட்ரிக்' சாதனை செய்துள்ள, பிரதீப் ரங்கநாதனை, தாங்கள் இயக்கும் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர், கோலிவுட் இயக்குனர்கள். பிரதீப் ரங்கநாதன், தனுஷ் சாயலில் இருப்பதால், அவரை, 'ஜூனியர் தனுஷ்' என்று குறிப்பிடுகின்றனர்.— சினிமா பொன்னையாகருப்புப் பூனை!சமீப காலமாக, 'ஹீரோ'வாக மட்டுமே நடித்து வரும், புரோட்டா காமெடியன், தன்னை, 'ஹீரோ'வாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அமரன் நடிகர் பாணியில் தானும் ஒரு படத்தை தயாரித்து, நடிக்கப் போகிறார்.ஆனால், அவரது சினிமா நண்பர்களோ, 'நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். படம் தயாரிப்பது போன்ற விஷப்பரீட்சையில் இறங்க வேண்டாம். படம் வெற்றி பெற்றால் பிரச்னை இல்லை. ஒருவேளை தோல்வி அடைந்தால், இதுவரை சம்பாதித்த மொத்த காசும் போய் விடும்...' என்று நடிகருக்கு, 'அட்வைஸ்' செய்து வருகின்றனர்.இதனால், 'அவசரப்பட்டு தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விட்டோமோ...' என்று மனதளவில் பீதியில் இருந்து வருகிறார், புரோட்டா காமெடியன்.சினி துளிகள்!* ஜெயிலர் -2 படத்தை அடுத்து, ஏற்கனவே தன்னை வைத்து, அருணாச்சலம் என்ற படத்தை இயக்கிய சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார், ரஜினிகாந்த்.* வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம்பெற்ற, புரோட்டா காமெடி மூலம் தன்னை பிரபலப்படுத்திய, சுசீந்திரன் இயக்கும் ஒரு படத்தில், 'ஹீரோ'வாக நடிக்க போகிறார், சூரி.* ‛வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும், அரசன் படத்திற்கு, அதிரடியான இசையை கொடுப்பேன்...' என்கிறார் இசையமைப்பாளர் அனிருத்அவ்ளோதான்!