கவிதைச்சோலை: யார் அந்த நாலு பேர்?
அந்த நாலு பேருக்கு பயந்துருசியாய் உண்ணவோ சுதந்திரமாய் சுவாசிக்கவோ முடியவில்லை! தந்திரமாய் பேசவோ'டிரெண்டி'யாய் உடை அணியவோசிகையை நவீனமாக்கவோமுடியவில்லை! சொந்த வாகனத்துடன் 'செல்பி' எடுக்கவோஎதிர்பாலருடன் பேசி சிரிக்கவோகாதலை பறைசாற்றவோ முடியவில்லை! நட்புகளுடன் சுற்றி திரியவோசொந்தங்களுடன் உறவாடவோஉடல் பெருக்கவோ இளைக்கவோமுடியவில்லை! சதா நேரமும் நம்மை கண்காணித்துவாழ்வின் நிம்மதியை பறிக்கும்சர்வ வல்லமை படைத்த அந்த நாலு பேர் யார்?எங்கு தேடியும் கிடைக்கவில்லையாரிடமும் கேட்டும் பயனில்லை வீட்டிலும் விடை கிடைக்கவில்லைவெளியிலும் சுட்டிக்காட்ட யாருமில்லை! இறுதியில் கடவுளிடமே கேட்டேன் தெய்வமே என் நிம்மதியை கெடுக்கும்மகிழ்ச்சியை மங்க செய்யும்அந்த நாலு பேர் யார் என்று! தெய்வீக சிரிப்புடன் கடவுள் சொன்னார்... மானிடர்களை கண்காணிக்க நான் நியமித்த அந்த நால்வரில் நீயும் ஒருவன் என்பதை அறிந்து கொள்! —ஆர்.ஹரிகோபி, டில்லி.