உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: இலக்கை நோக்கி...

வெற்றிக்கும் தோல்விக்கும் கொஞ்சம் இடைவெளி தான் முயற்சி தான் முடிவு செய்கிறது உன் இலக்கை! அன்பிற்கும் பகைக்கும் கொஞ்சம் இடைவெளி தான் வார்த்தைகள் தான் முடிவு செய்கிறது உன் இலக்கை! ஆக்கத்திற்கும் அழிவுக்கும் கொஞ்சம் இடைவெளி தான் உழைப்பு தான் முடிவு செய்கிறது உன் இலக்கை! உண்மைக்கும் பொய்க்கும் கொஞ்சம் இடைவெளி தான் சொல் தான் முடிவு செய்கிறது உன் இலக்கை! அமைதிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் கொஞ்சம் இடைவெளி தான் செயல் தான் முடிவு செய்கிறது உன் இலக்கை! நன்மைக்கும் தீமைக்கும் கொஞ்சம் இடைவெளி தான் பார்வை தான் முடிவு செய்கிறது உன் இலக்கை! காதலுக்கும் நட்பிற்கும் கொஞ்சம் இடைவெளி தான் எண்ணம் தான் முடிவு செய்கிறது உன் இலக்கை! இளமைக்கும் முதுமைக்கும் கொஞ்சம் இடைவெளி தான் வயசு தான் முடிவு செய்கிறது உன் இலக்கை! உயர்வுக்கும் தாழ்வுக்கும் கொஞ்சம் இடைவெளி தான் நம்பிக்கை தான் முடிவு செய்கிறது உன் இலக்கை! இருக்கு இல்லை என்பதற்கும் கொஞ்சம் இடைவெளி தான் மனம் தான் முடிவு செய்கிறது உன் இலக்கை! - எஸ்.முருகன், கடம்பத்துார், திருவள்ளூர் மாவட்டம். தொடர்புக்கு: 9894918250.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !