வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கவிதை, உலகில் எல்லாமே அழகு தான் ரசிக்க மட்டும் செய்யாமல் அதன் மறுபக்கத்தை முயன்று பார்க்க உன்னதமான விடைகள் கிடைக்கும் என்பதை அழகாக விளக்கியது. நன்றி
மலையை அண்ணாந்து பார்க்காதே... ஏறிப்பார் உச்சியில் பரந்த அழகு தெரியும்! கரையில் இருந்து கடலை ரசிக்காதே... நீச்சல் பழகி குதித்துப் பார் முத்து பவளம் அத்தனையும் தெரியும்! தென்றல் காற்றை ஜன்னல் வழியே ரசிக்காதே... மாசாக்காமல் இருந்து பார் மனதெல்லாம் அழகு தெரியும்! திருமண வீட்டில் ஆடம்பரத்தை வியக்காதே... வீணாக்காமல் உணவருந்திப் பார் உணவின் மகத்துவம் தெரியும்! அருவியை ரசிக்க மட்டும் செய்யாதே... தண்ணீரை சேமித்துப் பார் குடிநீர் மகத்துவம் தெரியும்! உணவக வேலையாட்களுக்கு 'டிப்ஸ்' மட்டும் வைக்காதே... அவர்களுடன் உணவருந்திப் பார் உழைப்பின் கதைகள் தெரியும்! உலகில் எல்லாமே அழகு தான் ரசிக்க மட்டும் செய்யாமல் அதன் மறுபக்கத்தை முயன்று பார்... உன்னத விடைகள் கிடைக்கும்! — கே.ஜி.ஜவஹர், சென்னை. தொடர்புக்கு:94440 53885.
கவிதை, உலகில் எல்லாமே அழகு தான் ரசிக்க மட்டும் செய்யாமல் அதன் மறுபக்கத்தை முயன்று பார்க்க உன்னதமான விடைகள் கிடைக்கும் என்பதை அழகாக விளக்கியது. நன்றி