உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: வணங்கத் தகுந்த மனிதன்!

உடைந்த பாறை உளிக்கு கட்டுப்பட்டால் சிலை நொறுங்கினால் மண்! செடியில் பூத்த பூக்கள் மொட்டவிழும் முன் மாலை வாடினால் சருகு! மேகம் உடைந்து ஆற்றில் விழுந்தால் குடிநீர் சாக்கடையில் கலந்தால் சேறு! ரசம் பூசினால் முகம் காட்டும் கண்ணாடி உடைந்தால் பீங்கான்! மடி கறந்த பால் உறைந்தால் தயிர் திரிந்தால் வீண்! மரத்தில் பழுத்தால் உண்ணத் தகுந்த பழம் கெட்டுப் போனால் அழுகல்! தறியில் பின்னிய நுால் மானம் காக்கும் ஆடை கிழிந்தால் கந்தல்! கட்டுப்பட்ட நெருப்பு ஒளி சிந்தும் தீபம் மீறினால் அழிவு! நல்ல சொற்கள் அன்பை விதைக்கும் அமுதம் நாபிறழ்ந்தால் விஷம்! மண்ணுள் புதைந்த விதைகூட முளைத்தால் பயன்தரும் மரம் மட்கினால் உரம்! அன்பிலும் நல்ல பண்பிலும் அரவணைத்துச் செல்லும் போது வணங்கத் தகுந்த மனிதன் போதையின் பாதையில் நிலை தடுமாறும் போது வெறுக்கத் தகுந்த மிருகம்! - எஸ்.செல்வம், அருப்புக்கோட்டை. தொடர்புக்கு: 9095375145


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !