உள்ளூர் செய்திகள்

சரஸ்வதி துதி!

திருமலைராய மன்னனின் ஆஸ்தான கவியான அதிமதுரம், கவி காளமேகத்திற்கு சரியான இருக்கை கொடுக்காமல் புறக்கணித்தார். அவர், சரஸ்வதியை தியானித்து, அரசனின் சிம்மாசனத்துக்கு இணையாக ஆசனம் பெற்றார். * சரஸ்வதியை போற்றும் விதமாக, சரஸ்வதி அந்தாதியை பாடினார், கவிச்சக்கரவர்த்தி கம்பர். * சரஸ்வதி தேவிக்கு நன்னிலம் அருகே உள்ள கூத்தனுாரில் கோவில் அமைத்து, அந்த தேவியின் சிறப்பை எடுத்துரைக்கும் வண்ணம், 'தக்கயாகப் பரணி' எனும் நுாலை இயற்றினார், ஒட்டக்கூத்தர்.*   பிரம்மன், சரஸ்வதியை துதித்த பின்னரே, பதி ஞானத்தின் உட்பொருளை சனத்குமாரருக்கு உபதேசிக்க முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !