உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

சொகுசு பேருந்து வில்லங்கம் உஷார்!உறவினர் வீட்டு சுப நிகழ்வில் பங்கேற்க, சகோதரருடன் தனியார் சொகுசு பேருந்தில் பயணித்தேன். இருக்கை அனைத்தும் நிரம்பியிருந்தன.எங்கள் எதிரிலிருந்த இருவர் அமரும் இருக்கையில், இளைஞர் ஒருவர் அமர்ந்திருக்க, மற்றொரு இருக்கை காலியாக இருந்தது.பேருந்து புறப்பட்டு, சில கி.மீ., கடந்து, ஒரு நிறுத்தத்தில் இளம்பெண் ஒருவர் ஏறி, காலியாக இருந்த அந்த இருக்கையில், அமர்ந்தாள்.சிறிது துாரம் சென்றதும், இளம்பெண்ணும், இளைஞரும், ஏதோ கிசுகிசு என்று பேசியபடி வந்தனர்.இருவரும் காதலர்கள் என்று நினைத்து, யாரும் கண்டுகொள்ளவில்லை.வழியில், ஒரு ஹோட்டலில் நின்று பேருந்து கிளம்பியது. அப்பெண் வரவில்லை. இளைஞன் மட்டும், வாட்டமான முகத்துடன் வந்தமர்ந்தான்.'பஸ் கிளம்பிடிச்சு... உன், 'லவ்வர்' வரலையா தம்பி?' என, இளைஞரிடம் கேட்டது தான் தாமதம்.'அவ என், 'லவ்வர்' இல்லீங்க. யார்னே எனக்கு தெரியாது. என் பக்கத்துல வந்து உட்கார்ந்தாள். அவளை நான், 'சில்மிஷம்' பண்ணினேன்னு அவமானப்படுத்தப் போறதா, 'பிளாக் மெயில்' பண்ணி, என்கிட்டேருந்து 2,000 ரூபாயை பறிச்சுக்கிட்டு போயிட்டா, சார்.'இதை வெளியில சொன்னா, என் பேரை கெடுத்துக்கிற மாதிரி ஆயிடும்ன்னு தான், அவ கேட்ட பணத்தை கொடுத்து அனுப்பிட்டேன். என்னை மாதிரி, இன்னும் எத்தனை பேரை ஏமாத்தினாளோ...' என்றார், விரக்தியுடன்.சொகுசு பேருந்தில், இப்படியும் வில்லங்கம் நடக்கிறது... உஷார்!வடிவேல் முருகன், நெல்லை.வாழும் வழியை தேடுங்கள்!சமீபத்தில், உறவினர் ஒருவரின் தந்தையின் இறுதிச் சடங்கை முன்னின்று செய்தவர், ஒரு திருநங்கை.இறுதிச் சடங்கு முடிந்ததும், அந்த திருநங்கையுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.'எத்தனையோ வேலைகள் இருக்கும் போது, இதில் ஈடுபட தோன்றியது எப்படி?' என்றேன்.'கவுரவமாக உழைத்து வாழ, எனக்கு ஒரு வேலை தேவை. பல இடங்களில் தேடியும், இல்லையென்று கை விரித்தனர். ஏமாற்றம் தான் மிஞ்சியது. அப்போது, இறுதிச் சடங்கு வேலைகளை செய்து வந்த பெரியவர் ஒருவர் மூலம், இந்த வாய்ப்பு கிடைத்தது.'வயதானவரால் இந்த வேலைகளை செய்ய முடியாததால், அவரின் வழிகாட்டுதலின்படி, வேலைகளை செய்யத் துவங்கினேன்.'துவக்கத்தில் எல்லாரையும் போல, கிண்டல் செய்தனர். என் நன்னடத்தை, கடின உழைப்பு மற்றும் தனித்திறனால், அவர்களின் வாயை அடைத்தேன்; வாழ்வில் முன்னேறினேன்.'வேலை தேடுவோர், ஒரு சில முயற்சிகளிலேயே கிடைக்கவில்லையென மனமுடைந்து முடங்கி விடக் கூடாது, விடாமுயற்சியோடு தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்தால், உறுதியாக ஒரு வேலை கிடைக்கும்...' என்று கூறி, விடைபெற்றார்.இளைஞர்களே... யாராவது கைப்பிடித்து அழைத்துச் சென்று வாழும் வழி காட்டுவர் என்று காத்திருக்காமல், வாழும் வழியை நீங்களே தேடுங்கள். கிடைக்கும் வேலையில் உங்களை நிலை நிறுத்தி, தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.வெ.பாலமுருகன், திருச்சி.நல்லெண்ண ஏற்பாடு!தோழியுடன், அப்பகுதியிலுள்ள தபால் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.தபால் உறை மற்றும் தபால் தலைகளை ஒட்டுவதற்கான இடத்தில், பசை பாத்திரத்தோடு, அதனருகே கை துடைக்க, 'டிஷ்யூ பேப்பர்'களும், துடைத்த பேப்பர்களை போட, குப்பைக் கூடையும் வைக்கப்பட்டிருந்தன.இதுபற்றி தபால் அதிகாரியிடம் கேட்டேன்.'தபால் அலுவலகத்திற்கு வரும் பலரும், பசையை பயன்படுத்திய பின், கையில் மீதமுள்ளதை இங்குள்ள மேசைகளிலும், சுவரிலும் பூசிச் செல்கின்றனர். இதனால், அசுத்தமாவதுடன், அதில் ஒட்டிக்கொள்ளும் துாசுகளால், சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்படுகிறது. அதைத் தவிர்க்கவே, இந்த ஏற்பாடு...' என்றார்.அவரின் நல்லெண்ண ஏற்பாட்டை, மனதார பாராட்டிவிட்டு வந்தேன்.-டி.யாஷினி, திருப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !