வித்தியாசமான திருவிழா!
நம்மூர், மஞ்சள் நீராட்டு விழா போல, மராட்டிய மாநிலம், கோல்காபூரில் உள்ள, பட்டண் கொடாலி என்ற கிராமத்தில் வாழும், 'தன்கர்' எனப்படும் பிரிவினர் இந்த, மஞ்சள் திருவிழாவை கொண்டாடுகின்றனர். ஆடு, மாடுகள் மேய்ப்பதை பூர்வீக தொழிலாக கொண்டவர்கள் இந்த, 'தன்கர்' இனத்தவர். திருவிழாவின் போது, இப்பகுதி மக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் பொடியை உடல் முழுவதும் பூசி கொள்கின்றனர். இத்திருவிழா அன்று ஒருவர் கூட மஞ்சள் பூசாமல் இருக்கக்கூடாது என்பது ஐதீகம். மஞ்சள் பொடியை இவர்கள், பண்டாரா என்று குறிப்பிடுகின்றனர். — ஜோல்னாபையன்