உள்ளூர் செய்திகள்

நம்மிடமே இருக்கு மருந்து - கீழாநெல்லி

* கீழாநெல்லியின் இலை, வேர், காய் அனைத்தும் மருந்தாகிறது. இதன் வேர், 10 கிராம் எடுத்து இடித்து, பால் அல்லது மோரில் கலந்து குடித்தால், கல்லீரலை பலப்படுத்தி, அது சம்பந்தமான நோய்களை போக்குகிறது * சிறுநீர் பாதை, எரிச்சலை குணமாக்குகிறது. மஞ்சள் காமாலையால் உடல் சோர்வு, வாந்தி, குமட்டல், பசியின்மை ஏற்படும். இது அதிகரிக்கும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்படும். இப்பிரச்னையை சரிசெய்யும் மருந்தாகிறது* இதன் இலையை, எண்ணெயில் இட்டு காய்ச்சி, தலைக்கு தேய்ப்பதால், உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன், கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்குகிறது; பார்வை தெளிவாகிறது* கீழாநெல்லி சாறுடன், உப்பு சேர்த்து, தோலில் பூசினால், அரிப்பு நோய்களும், இதன் இலையுடன், சிறிது மஞ்சளை சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊற விட்டு குளித்தால், தோல் நோய்களும் குணமாகும்* இதன் சாற்றை மஞ்சளுடன், கலந்து போடும்போது, 'சொரியாசிஸ்' சரியாகும். கீழாநெல்லி செடியை நன்றாக அரைத்து, சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப் போட்டால், உடனே குணமாகும்* கீழாநெல்லியை அரைத்து, பசும்பாலுடன் கலந்து, காலை - மாலை இரு வேளை, தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால், உடல் சூடு தணிந்து, குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும், இதை பயன்படுத்தலாம்* கீழாநெல்லிச் செடி, கரிசலாங் கண்ணி இலை, தும்பை இலை, சீரகம், பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சம பங்கு எடுத்து, காய்ச்சிய பசும் பால் விட்டு அரைத்து, கோலிக்குண்டு அளவு, காலை - மாலை இருவேளையும் பாலுடன் குடித்து வந்தால், ஏழு நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும் * கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று, பல் துலக்கி வந்தால், பல் வலி குணமாகும்.தொகுப்பு: பொ.பாலாஜி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !