உள்ளூர் செய்திகள்

பட்டாசு வெடிக்கும் போது...

* பட்டாசு வெடிக்கும் போது, ஜீன்ஸ், காட்டன் சுடிதார் போன்ற உடலோடு ஒட்டிய உடைகளைப் போட்டு வெடிக்க வேண்டும் * நீண்ட வத்திகளை கொண்டு, பாதுகாப்பாக பட்டாசு வெடியுங்கள் * புதுரக பட்டாசுகளை கொளுத்தும் முறை பற்றி, தயாரிப்பாளர் பதிவிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றுங்கள் * பட்டாசு வெடிக்கும் போது, ஒரு வாளி நீர் மற்றும் மணல் பக்கத்தில் வைத்திருங்கள் *  எரியும் ஊதுவத்தி, விளக்கு, அடுப்பு போன்றவைகளுக்கு அருகில் வெடிகளை வைக்காதீர்கள் * புஸ்வாணம் கொளுத்தும் போது, சம தரையில் வைத்து, பக்கவாட்டில் நின்று கொளுத்துங்கள் *  ராக்கெட் போன்ற பட்டாசுகள் ஆபத்தானவை. அவைகளை திறந்தவெளி இல்லாத இடங்களில் வெடிப்பது ஆபத்தானது *  குழந்தைகள் தங்கள் சட்டைப்பைகளில் பட்டாசுகளை வைப்பதை தவிர்ப்பது நல்லது *   பட்டாசுகளை பக்கவாட்டில் நின்று கொளுத்துங்கள் * புகையில் சிக்கிக் கொண்டால், கீழே மண்டியிட்டு சுவர் ஓரமாக வெளியேறுங்கள்; பாதிப்பு குறையும் * குடிசைகள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசு வெடியுங்கள் * சாலைகளில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் *  வெடிப்பட்டாசுகளை பெரியவர்கள் மேற்பார்வையில் வெடியுங்கள் * பூந்தொட்டி, சங்கு சக்கரம், ராக்கெட் போன்ற பட்டாசுகளை கையில் வைத்து கொளுத்தாதீர்கள் * வெடிப்பட்டாசுகளின் மீது, டப்பா அல்லது வேறு பொருட்களால் மூடி வெடிக்க கூடாது * பட்டாசுகளை கொளுத்தியவுடன் சற்று துாரம் விலகி நில்லுங்கள் * மின்சாரக் கம்பங்களின் அருகில் பட்டாசுகளை வைத்து வெடிக்காதீர்கள் * ஆடையில் தீப்பற்றி கொண்டால், ஓடாதீர்கள். படுத்து உருளுங்கள்; தண்ணீரை ஊற்றி அணையுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !