உள்ளூர் செய்திகள்

தீபத்தன்று பொரி உருண்டைகள் செய்து வழிபடுவது ஏன்

முன்பொரு காலத்தில் ஒரு அரசன் இருந்தான். அவன் தன் மகளை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தான். அந்த இளவரசியோ, ஒரு குறிப்பிட்ட யானையிடம் அதிக பாசம் வைத்திருந்தாள். தினமும் அந்த யானைக்கு பொரி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை தன் கையாலேயே கொடுத்து வந்தாள். தக்க வயதில், அரசன் தன் பெண்ணிற்கு மணமுடித்து வைத்தான். கணவன் வீட்டிற்கு சென்ற இளவரசி, யானையை பிரிந்ததால், உடன் பிறந்த சகோதரனைப் பிரிந்தது போல், மிகவும் மன வருத்தம் உற்றாள். கார்த்திகை தினத்தன்று பெண்ணிற்கு சீர் செய்யும் பொருட்டு, அரசன், அவளுக்கு பிடித்த யானை தலை உடைய விளக்குகளை சீரோடு சேர்த்துக் கொடுத்தார். மிகவும் ஆசையுடன் அவ்விளக்குகளைப் பெற்றுக்கொண்ட, இளவரசி, கஜ தீபங்களை ஏற்றி, பொரி, வெல்லம், தேங்காய் சேர்த்து, யானை சகோதரனை நினைத்து, ஆண்டவனுக்கு சமர்ப்பித்தாள். பொரி உருண்டையை நைவேத்தியம் செய்யும் பழக்கம் இப்படித்தான் உண்டானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !