என்.ஐ.டி., கல்லுாரியில் 122 பேராசிரியர் பணியிடங்கள்
மத்திய அரசின் கீழ் செயல்படும் திருச்சி என்.ஐ.டி., கல்லுாரியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி பேராசிரியர் 105, இணை பேராசிரியர் 15, பேராசிரியர் 2 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எச்டி., வயது: 18-35 (6.4.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 2500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1250 கடைசிநாள்: 6.4.2026 விவரங்களுக்கு: nitt.edu