சென்னை உயர்நீதிமன்றத்தில் 127 காலியிடங்கள்
நாட்டின் மிக பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்று. 150 ஆண்டுகள் கடந்து செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்கது. இங்கு காலியாக உள்ள 127 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம் : துப்புரவு பணியாளர் பிரிவில் 68 இடங்களும், சுகாதார பணியாளர் பிரிவில் 59 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. வயது தகுதி: 1/7/2017 அடிப்படையில் இடஒதுக்கீட்டு பிரிவினர் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு 2017 ஜூலை 20க்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 250 ரூபாய். இதனை 'டிடி' ஆக செலுத்த வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. முகவரி: The Registrar General, High Court, Chennai - 600 104