இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 205 காலியிடங்கள்
பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது. அரசுத்துறை சார்ந்த நிறுவனமாக இருந்த போதும் தொடர்ந்து லாபகரமான மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் செயலாற்றி வரும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தற்சமயம் காலியாக உள்ள 205 நிர்வாக அதிகாரி காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இந்தப் பதவிக்கு மாநில வாரியாக விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டியிருக்கும்.வயது: 01.03.2017 அடிப்படையில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு அல்லது முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேற்கண்ட காலியிடங்களுக்கான தேர்ச்சியில் எழுத்துத் தேர்வு, நேர்காணல் போன்ற முறைகள் இருக்கும். எழுத்துத் தேர்வைப் பொறுத்த மட்டில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்வில் 100 கேள்விகளைக் கொண்ட அப்ஜெக்டிவ் தேர்வு பிரிலிமினரி தேர்வாக நடத்தப்படும். இதில் ஆங்கிலம், ரீசனிங் எபிலிடி, ஆப்டியூட் போன்ற பிரிவுகள் இருக்கும். இதில் வெற்றி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட தேர்ச்சிக்கு செல்ல முடியும். இரண்டாம் கட்ட தேர்வில் அப்ஜெக்டிவ், டிஸ்கிரிப்டிவ் என்ற இரண்டு பிரிவுகள் இருக்கும். இவற்றில் 200 கேள்விகளைக் கொண்ட அப்ஜெக்டிவ் தேர்வில் ரீசனிங், இங்கிலீஷ் லாங்குவேஜ், ஜெனரல் அவேர்னஸ், கம்ப்யூட்டர், குவான்டிடேடிவ் ஆப்டியூட் ஆகிய பகுதிகள் இருக்கும். 30 நிமிடங்களில் முடிக்கக்கூடிய 30 மதிப்பெண்களுக்கான தேர்வாக டிஸ்கிரிப்டிவ் தேர்வு நடத்தப்படும்.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். மின்னனு பரிவர்த்தனை மூலம் செலுத்த வேண்டும்.தேர்வு மையங்கள்: முதல் கட்ட எழுத்துத் தேர்வை தமிழகத்தின் சென்னை, கோவை மற்றும் மதுரை மையங்களிலும், இரண்டாம் கட்ட தேர்வை சென்னையில் மட்டும் எதிர்கொள்ளலாம்.கடைசி நாள்: 20.04.2017விபரங்களுக்கு: https://nationalinsuranceindia.nic.co.in/portal/page/portal/Corporate/Home/RecruitmentPage