2,313 பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பதவி
வங்கித்துறையில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த பாரத ஸ்டேட் வங்கியின் துவக்கம் என்பது நமது நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரே இருந்தது. இவ்வளவு பழமையான வரலாற்றைக் கொண்டிருக்கும் வங்கி என்ற போதும், தற்சமயம் தனியார் துறை சார்ந்த மூன்றாம் தலைமுறை வங்கிகளுக்கு சவாலாக நவீன தொழில் நுட்ப சேவைகள், பரந்து விரிந்துபட்ட கிளையமைப்பு என்று பல்வேறு சிறப்புகளுடன் இயங்கி வருகிறது. எஸ்.பி.ஐ., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 2,313 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: 1.4.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: 1.7.2017 அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை : பாரத ஸ்டேட் வங்கிக்கான தேர்ச்சி முறை மூன்று கட்டங்களாக உள்ளது. முதலாவதாக முதல்நிலை தேர்வு, இரண்டாம் நிலையில் மெயின் தேர்வு, மூன்றாம் நிலையில் குழுவிவாதம் போன்றவை இருக்கலாம். பிரிலிமினரி தேர்வு ஒரு மணி நேரத்தில் இங்கிலீஷ் லாங்குவேஜ், ரீசனிங் எபிலிடி, குவாண்டிடேடிவ் ஆப்டிடியூட் போன்ற பிரிவுகளில் இருக்கும். இரண்டாம் நிலையான் மெயின் எக்சாமில் அப்ஜெக்டிவ் வகையில் 200 கேள்விகளும், 50 மதிப்பெண்களுக்கான டெஸ்கிரிப்டிவ் தேர்வும் இருக்கும். தேர்வு மையங்கள் : தமிழ் நாட்டில் சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மையங்களில் நடைபெறும்.விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.முதல்நிலை ஆன்லைன் தேர்வு நாள்: 29 மற்றும் 30 ஏப்ரல், 6 மற்றும் 7 மே 2017மெயின் தேர்வு நாள்: 4.6.2017விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.3.2017விபரங்களுக்கு: www.sbi.co.in/careers