உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு படையில் 233 கான்ஸ்டபிள் காலியிடங்கள்

துணை ராணுவத்தை சேர்ந்த சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'தலைமை கான்ஸ்டபிள்' பிரிவில் கம்யூனிகேசன் 197, எலக்ட்ரீசியன் 29, கால்நடை 5, ஸ்டெவார்டு 2 என மொத்தம் 233 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / டிப்ளமோ வயது: 18-27 (20.4.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 30.4.2026 விவரங்களுக்கு: ssb.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !