உள்ளூர் செய்திகள்

வங்கியில் 670 அதிகாரி பணியிடங்கள்

இந்தியாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆப் இந்தியா மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் வங்கி. இது நவீன வங்கிச் சேவை, சிறந்த வாடிக்கையாளர் சேவை, நாடு தழுவிய அளவில் கிளைகளைக் கொண்ட இவ்வங்கியில் காலியாக உள்ள அதிகாரிகள் பிரிவிலான 670 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.பிரிவுகள்: ஜூனியர் மேனேஜ்மென்ட் ஸ்கேல் 1 பிரிவிலான கிரெடிட் ஆபிசர் பிரிவில் 270 இடங்களும், மிடில் மேனேஜ்மென்ட் ஸ்கேல் 2 பிரிவிலான மேனேஜர் பிரிவில் 400 இடங்களும் சேர்த்து மொத்தம் 670 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: 10.04.2017 அடிப்படையில் கிரெடிட் ஆபிசர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 - 30 வயதுக்கு உட்பட்டவராகவும், மேனேஜர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 23 - 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: கிரெடிட் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்து விட்டு, எம்.பி.ஏ., அல்லது பி.ஜி.டி.பி.எம்., அல்லது பி.ஜி.பி.எம்., அல்லது பி.ஜி.டி.பி.ஏ., படிப்பை முடித்திருக்க வேண்டும். அறிவியல், காமர்ஸ் அல்லது பொருளாதாரத்தில் முது நிலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்., முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். மேற்கண்ட தகுதிகளுடன் கம்ப்யூட்டர் தொடர்பான தகுதியும் கூடுதலாக தேவைப்படும்.ஸ்கேல் 2 மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட கிரெடிட் ஆபிசர்களுக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி ஒன்றை பெற்றிருப்பதோடு குறைந்த பட்சம் 2 வருட காலத்திற்கு பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கியில் அதிகாரியாக பணியாற்றிய அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இந்த காலத்தில் குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாய் வணிகம் செய்த அனுபவமும் இருக்க வேண்டும்.தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும். 120 நிமிடங்களில் நடத்தப்படும் இத்தேர்வில் 150 கேள்விகள் இருக்கும். இதன் பின்னர் நேர்காணல் இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 600 ரூபாய். கடைசி நாள் : 2017 மே 5. விபரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !