பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு உதவியாளர் வாய்ப்பு
கோவையில் உள்ள வன மரபியல், மரப்பெருக்கு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எம்.டி.எஸ்., 8, கிளார்க் 1, டெக்னீசியன் 3, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 4 என மொத்தம் 16 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ பிளஸ் 2 / பி.எஸ்சி., வயது: 18-27, 18-30, 18-21தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.தேர்வு மையம்: கோவைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.கடைசிநாள்: 30.11.2024விவரங்களுக்கு: ifgtb.icfre.gov.in