நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை
கோவை மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணிகளில் காலியாக உள்ள 49 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிட விபரம் : உதவியாளர் பிரிவில் 33 இடங்கள், இரவுக் காவலர் பணியில் 5 இடங்கள், துப்புரவு பணியாளர் பிரிவில் 5 இடங்கள், மசால்ச்சி பிரிவில் 4 இடங்கள், தோட்டக்காரர் பிரிவில் 2 இடங்கள் என மொத்தம் 49 இடங்கள் உள்ளன. தகுதிகள் : உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மற்ற பணிகளுக்கு தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ்களின் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதித் தேர்வுக்கு இந்த நீதிமன்ற இணையதளத்தின் மூலம் அழைக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசிநாள் : 2017 ஜூலை 12. முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், கோவை - 641 018.விபரங்களுக்கு : http://ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20OA%20AND%20MASALCHI%2012-06-2017_0.pdf