யூ.பி.எஸ்.சி., அறிவித்துள்ள துணை கமாண்டண்ட் பணியிடங்கள்
மத்திய அரசின் பணியிடங்களை நிரப்புவதில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யூ.பி.எஸ்.சி.,) அமைப்பு முக்கிய பணிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக மத்திய காவல் படைகளில் காலியாக இருக்கும் (சி.பி.எப்., - ஏ.சி.,) அசிஸ்டென்ட் கமாண்டண்ட் பணியிடங்கள் 179ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடங்கள்: எல்லைப் பாதுகாப்புப் படையில் (பி.எஸ்.எப்.,) 28ம், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.,) 65ம், மத்திய தொழிலக காவல் படையில் (சி.ஐ.எஸ்.எப்.,) 23ம், சகஸ்ட்ர சீமா பாலில் (எஸ்.எஸ்.பி.,) 63ம் சேர்த்து மொத்தம் 179 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.வயது: 01.08.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 20 - 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.08.1992க்கு பின்னரும் 01.08.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக்கட்டணம் 200 ரூபாய். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 மே 5. விபரங்களுக்கு: