உள்ளூர் செய்திகள்

மீன்வளத்துறையில் பணிபுரிய வேண்டுமா

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் மீன்வளத்துறையும் முக்கியமான ஒரு துறை. இத்துறையில் தற்சமயம் காலியாக இருக்கும் 13 டெக்னிகல் அசிஸ்டென்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதி : சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பக் கட்டணம் ரூ.400/-க்கான டி.டி.,யை Executive Engineer, Fishing Harbour Project Division, Chennai என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., விதவைகள், மாற்றுத் திறனாளிகள் பிரிவினராக இருந்தால் ரூ.200/-க்கு எடுத்தால் போதுமானது.தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.The Chief Engineer, O/o.the Director of Fisheries, Fisheries Department, DMS Campus, Teynampet, Chennai-600 006.கடைசி நாள் : 2017 ஜூலை 14.விபரங்களுக்கு : www.fisheries.tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !