இன்ஜினியரிங் நிறுவன காலியிடங்கள்
பிராட்கேஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் பெசில் (பி.இ.சி.ஐ.எல்.,) என்ற சுருக்கமான பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் கிராஜூவேட் அப்ரென்டிஸ், டெக்னீசியன் அப்ரென்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேவைகள்: இந்த இரண்டு பதவிகளுமே பெங்களூருவில் நிரப்பப்பட உள்ளன. எனவே அங்கே பணிபுரியத் தயாராக இருக்க வேண்டும். கிராஜூவேட் அப்ரென்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இப்பிரிவில் 4 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இப்பிரிவில் 2 இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பிக்க: பெசில் இணையதளத்திலிருந்தோ அல்லது பெங்களூருவிலுள்ள இந்த நிறுவனத்தின் ரீஜனல் அலுவலகத்திலிருந்தோ விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, உரிய முறையில் நிரப்பி பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். BECIL Regional Office , # 162, 2nd Main Road, 1st Cross AGS Layout, RMV 2nd Stage, Bengaluru- 560 094.கடைசி நாள்: 2017 ஜூன் 26.விபரங்களுக்கு: www.becil.com