உள்ளூர் செய்திகள்

அணுசக்தி கழகத்தில் எக்சிகியூடிவ் பணியிடங்கள்

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்பது இந்திய அணுசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அணுசக்தி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் தற்சமயம் 150 எக்சிகியூடிவ் டிரெய்னிக்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கல்வித் தகுதி: பி.இ., பி.டெக்., அல்லது பி.எஸ்சி., இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களைப் பெற இணையதளத்தைப் பார்க்கவும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-ஐ நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணமாக செலுத்த வேண்டும்.தேர்ச்சி முறை: கேட் 2017 மதிப்பெண்கள் அடிப்படையிலும், நேர்காணல் அடிப்படையிலும் இந்த காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 15.06.2017விபரங்களுக்கு: http://www.npcil.nic.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !