குருபார்வை
கந்தவேள் ராஜபாளையம் எஸ். எஸ். சி. , சி. ஜி. எல். மற்றும் வங்கி பி. ஓ. தேர்வுகளுக்கு இடையே உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?தற்போது அறிவிக்கப்பட்டுள்ள எஸ். எஸ். சி. , சி. ஜி. எல். தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? மறக்காமல் விண்ணப்பிக்கவும். உங்கள் கேள்விக்கான பதில் இதோ.....பொதுவாக இந்த இரண்டு தேர்வுகளுக்குமான பாடத் திட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள். சில அடிப்படையான வித்தியாசங்களை மட்டும் காண்போம்.*எஸ். எஸ். சி. தேர்வில் இடம் பெரும் பொது அறிவுப் பகுதியில் நடப்புச் செய்திகள் மட்டுமல்லாது ஸ்டாடிக் ஜி. கே எனப்படும் மாறாத பொது அறிவு கேள்விகளும் இடம்பெறுகின்றன. ஆனால் பி ஓ தேர்வில் வங்கிதுறை சார்ந்த நடப்புச் செய்திகள் இடம்பெறுகின்றன. *எஸ்.எஸ்.சி., தேர்வின் கணிதப் பகுதியில் நீங்கள் அனைத்து பிரிவுகளில் இருந்தும் கேள்விகளை எதிர்பார்க்கலாம். ஆனால் பி. ஓ., தேர்வில் டாட்டா இன்டர்ப்ரிடேஷனை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளை எதிர்பார்க்கலாம். *சமூக பொருளாதார அடிப்படைகளை கொண்ட கேள்விகளை பி.ஓ. பொது அறிவுப் பகுதியில் எதிர்பார்க்கலாம். ஆனால் எஸ்.எஸ்.சி., தேர்வுக்கு இது தேவைப்படுவதில்லை.*எஸ்.எஸ்.சி., தேர்வை விட பி.ஓ. தேர்வில் ஆங்கில கேள்விகளின் தரம் கடினமாக இருக்கின்றன. மேலும் பி. ஓ. தேர்வில் விரிவாக விடையளிக்கும் ஆங்கிலம் மற்றும் குளோஸ் டெஸ்ட் ஆகியவை இடம் பெறுகின்றன. இது எஸ்.எஸ்.சி. யில் இல்லை. *எஸ்.எஸ்.சி., கணிதப் பகுதிக்கு நீங்கள் TRIGNOMETRY பகுதியில் அடிப்படைகளை அறிந்து தெரிந்து கொள்வது அவசியம். பி.ஓ. தேர்வில் இது அவசியம் இல்லை. *பி.ஓ. தேர்வின் ஆங்கில பகுதியில் இலக்கணத்தை விட பிற பகுதிகளான ரீடிங் கம்ப்ரெஹென்ஷன், சென்டன்ஸ் அரேஞ்சிங் போன்றவற்றில் கேள்விகள் இடம்பெறுகின்றன. எஸ்.எஸ்.சி., சி.ஜி.எல். தேர்வில் அடிப்படையில் இலக்கணமே முக்கியத்துவம் பெறுகிறது. *எஸ்.எஸ்.சி,தேர்வில் இடம் பெரும் ரீசனிங் கேள்விகள் ஒப்பீட்டளவில் சற்று எளிதானவை. பி.ஓ. தேர்வில் நீங்கள் அதிகம் இதில் பயிற்சி செய்ய வேண்டும்.