ஹெவி இன்ஜினியரிங் நிறுவன காலியிடங்கள்
ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட், 1958ல் நிறுவப்பட்ட இந்தியாவின் மிகப் பெரிய இன்ஜினியரிங் தொடர்பான நிறுவனம். இதில் காலியாக உள்ள ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமோ பயிற்சியாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிட விபரம் : ஐ.டி.ஐ., பயிற்சியாளர்கள் பிரிவில் எலக்ட்ரீசியன், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர் ஆகிய பிரிவுகளில் தலா 10 இடங்களும், போர்ஜர், பவுண்டரி மேன் பிரிவுகளில் தலா 5 இடங்களும், வெல்டர் பிரிவில் 8 இடங்களும், ஆர்.சி.சி., பிரிவில் 7 இடங்களும் சேர்த்து மொத்தம் 65 இடங்கள் உள்ளன. டிப்ளமோ பயிற்சியாளர்கள் பிரிவில் மெக்கானிக்கல் / டூல் அண்டு டை மேக்கிங் பிரிவில் 15 இடங்களும், சிவில் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவுகளில் தலா 5 இடங்களும், மெட்டலர்ஜி/பவுண்டரி/போர்ஜ் டெக்னாலஜி பிரிவில் 10 இடங்களும் சேர்த்து மொத்தம் 35 இடங்கள் உள்ளன.வயது : விண்ணப்பிப்பவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: ஐ.டி.ஐ., பயிற்சியாளர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் ௧௦ம் வகுப்பு முடித்துவிட்டு, விண்ணப்பிக்கும் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் என்.சி.வி.டி.,/எஸ்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.டிப்ளமோ பயிற்சியாளர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.கடைசி நாள்: 2017 மே 8.விபரங்களுக்கு: www.hecltd.com