எல்.ஐ.சி.,யில் சேர விருப்பமா...
எல்.ஐ.சி., யின் கீழ் செயல்படும் எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.உதவியாளர் பிரிவில் மஹாராஷ்டிரா53, கர்நாடகா 38, தெலுங்கானா 37, உத்தரபிரதேசம் 17, ஆந்திரா 12, ம.பி., 12, தமிழகம் 10 உட்பட 200 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு. பள்ளி / கல்லுாரியில் கம்ப்யூட்டர் / ஐ.டி., ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.வயது: 21 - 28 (1.7.2024ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி, தஞ்சாவூர்.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800கடைசிநாள்: 14.8.2024விவரங்களுக்கு: lichousing.com