உள்ளூர் செய்திகள்

லோக்சபாவில் பணியாற்ற விருப்பமா

லோக்சபாவில் காலியாக உள்ள 31 ஜூனியர் கிளார்க் பதவிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி : ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதலாக கம்ப்யூட்டர் தொடர்பான அறிவு தேவைப்படும். மேலும் ஒரு நிமிடத்தில் 40 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். வயது தகுதி : தகுதியான விண்ணப்பதாரர்கள் 9/8/2017 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது சலுகை உள்ளது. தேர்ச்சி முறை: முதலில் பிரிலிமினரி தேர்வு நடத்தப்படும். இதில் பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது ஆங்கிலம் ஆகியவற்றை உள்ளடக்கி 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் இரண்டாம் கட்ட மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் ஆங்கிலத்தில் கடிதம், கட்டுரை மற்றும் கிராமர், தட்டச்சு தேர்வு ஆகியவை நடத்தப்படும். இதன்மூலம் இறுதியாக தேர்ச்சி நடக்கும். தேர்வு மையம் : சென்னை, டில்லி, கோல்கட்டாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை : இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி : 2017 ஆக., 9. விபரங்களுக்கு : http://164.100.47.193/JRCell/Module/Notice/_full%20text%20advertisment%20junior%20clerk%207_2017.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !