ஐ.டி.ஐ., படிப்புக்கு என்.எல்.சி.,யில் வேலை
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தற்போது என்.எல்.சி., இந்தியா என்ற பெயர் மாற்றத்துடன் இயங்கி வருகிறது. எரிசக்தி தொடர்புடைய நிறுவனங்களில் மிகவும் புகழ்பெற்ற இந்த நிறுவனம் தமிழகத்தின் நெய்வேலியில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சம். இந்த நிறுவனத்தில் காலியாக அப்ரென்டிஸ்ஷிப் டிரைய்னிங்கிற்கான காலியிடங்கள் 127ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: பிட்டரில் 22, டர்னரில் 8, மோட்டார் வெகிக்கிள் மெக்கானிக்கில் 37, பிளம்பரில் 3, கார்பெண்டரில் 2, பாசாவில் 11, மெடிக்கல் லேப் டெக்னீசியன் (பாதாலஜி அண்டு ரேடியாலஜி)யில் 17ம் காலியிடங்கள் உள்ளன. வயது: 01.04.2017 அடிப்படையில் விண்ணப்பதாரருக்கு 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ளவர்கள் மட்டுமே இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.கல்வித் தகுதி: முதல் 7 இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ.,யில் என்.சி.வி.டி., டி.ஜி.இ.டி., கைவினைஞர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாசாவிற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ.,யில் (என்.சி.வி.டி/டி.ஜி.இ.டி.,) சி.ஓ.பி.ஏ.,வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேப் டெக்னீசியன் பிரிவுக்கு உயிரியல் பிரிவில் பிளஸ் ௨ வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: www.nlicindia.com என்ற இணையதளத்திற்கு சென்று முதலில் ஆன்லைன் ரெஜிஸ்ட்ரேஷன் படிவத்தை சமர்ப்பித்து அதனை பிரின்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் இந்த பிரின்ட் அவுட்டுடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். துணைப் பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், நெய்வேலி - 607803கடைசி நாள் : 15.03.2017விபரங்களுக்கு :