இந்திய ராணுவத்தில் படிப்புடன் லெப்டினன்ட் பணி
இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டெக்னிக்கல் என்ட்ரி திட்டம்' பிரிவில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 (இயற்பியல், வேதியியல், கணிதம்) வயது: 1.7.2007 - 1.7.2010க்குள் பிறந்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை: ஜே.இ.இ., (மெயின்) மதிப்பெண், நேர்முகத்தேர்வு படிப்பு , பணி: நான்காண்டு பயிற்சியின் முடிவில் இன்ஜினியரிங் டிகிரி அளிக்கப்படும். 'லெப்டினன்ட்' பணியும் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 12.6.2026 விவரங்களுக்கு: joinindianarmy.nic.in