மசகான் கப்பல் கட்டும் தள காலியிடங்கள் அறிவிப்பு
இந்தியாவின் மும்பையிலுள்ள மசகான் டாக் லிமிடெட் கப்பல் கட்டுதல், கரையோர கப்பல் படைப்பாக்கப் பணிகளில் ஈடுபட்டு வரும் பிரசித்தி பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஐ.எஸ்.ஓ., - 9001 : 2008 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். 18 ஆவது நூற்றாண்டில் நிறுவப்பட்டு 200 வருடங்களாக இந்த தளம் செயல்பட்டு வருகிறது. இந்தியக் கப்பல் படை, கடலோரக் காவல் படை, ஓ.என்.ஜி.சி., போன்றவற்றிற்கான கப்பல்களை இந்த நிறுவனமே வடிவமைப்பது மற்றொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் டெக்னிகல் பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: மசகான் டாக் லிமிடெட் நிறுவனத்தில் ஜூனியர் க்யூ.சி., இன்ஸ்பெக்டர் பிரிவில் மெக்கானிகலில் 20 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகலில் 3 இடங்களும், டிராப்ட்ஸ்மேன் பிரிவில் ஒரு இடமும், ஜூனியர் பிளானர் எஸ்டிமேட்டர் பிரிவு மெக்கானிகலில் 11 இடங்களும், எலக்ட்ரிகல்/எலக்ட்ரானிக்ஸில் ஒரு இடமும், ஸ்டோர் கீப்பர் பிரிவில் 23 இடங்களும், பிட்டர் பிரிவில் 145 இடங்களும், ஸ்டரக்சுரல் பேப்ரிகேட்டர் பிரிவில் 151 இடங்களும், பைப் பிட்டர் பிரிவில் 179 இடங்களும், எலக்ட்ரீசியன் பிரிவில் 53 இடங்களும், கார்பெண்டர் பிரிவில் 13 இடங்களும், பெயிண்டர் பிரிவில் 9 இடங்களும், யூடிலிடி ஹேண்ட் பிரிவில் 33 இடங்களும், சிப்பர் கிரைண்டர் பிரிவில் 63 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. காலி இடங்கள் பற்றிய முழு விபரங்களை இந்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அறியவும்.தேவைகள்: 01.08.2012 அன்று 18 வயது நிரம்பியவர்களும், 33 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. டெக்னிகல் பதவிகளுக்கு விண்ணப்பிக்க உரிய பிரிவுகளில் டிப்ளமோ படிப்பு தேவைப்படும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கான தகுதியை இணைய தளத்திலிருந்து அறியவும். மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-க்கான டி.டி.,யை Mazagon Dock Ltd., என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.ஏனைய தகவல்கள்: விண்ணப்பப் படிவத்தை ஆங்கிலம், இந்தி அல்லது மராத்தி மொழியில் ஒரு ஏ4 அளவு தாளில் நிரப்பிஅனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் உரிய இணைப்புகளையும் மறவாமல் இணைக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 24.08.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மற்ற விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.முகவரி:Recruitment Cell,Service Block & 3rd Floor,Mazagon Dock Limited, Dockyard Road,Mumbai - 400010.இணையதள முகவரி: www.mazagondock.gov.in/newsite2010/careet_aug12/rec60%20&%20web.pdf