உள்ளூர் செய்திகள்

பட்டதாரிக்கு அதிகாரி வாய்ப்பு

பொதுத்துறை வங்கிகளில் நவீனமய வங்கிச் சேவைகளை வழங்கி வரும் ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் நாடெங்கும் கிளைகளைக் கொண்டுள்ளது. ஓ.பி.சி., என்ற பெயரால் அறியப்படும் ஓரியண்டல் வங்கியில் சிறப்பு நிலை அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 120 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: சீனியர் மேனேஜர் (எப்.ஏ.,) -சி.ஏ., டாக்சேஷன் பிரிவில் 1, சீனியர் மேனேஜர் (எப்.ஏ.,) - சி.ஏ., ஏ.எஸ்., செல்லில் 1, சீனியர் மேனேஜர் (எப்.ஏ.,) - சி.ஏ., வில் 18, அசிஸ்டென்ட் மேனேஜர் - பினான்சியல் அனலிஸ்ட் பிரிவில் 100ம் சேர்த்து மொத்தம் 120 இடங்கள் காலியாக உள்ளன.வயது: முதல் இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 முதல் 35 வயதுடையவராகவும், மூன்றாவது பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 23 முதல் 35 வயது உடையவராகவும், நான்காவது பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: முதல் மூன்று பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் சி.ஏ., படிப்பை ஒரே முயற்சியில் ஐ.சி.ஏ.ஐ., கல்வி அமைப்பு மூலமாக முடித்திருக்க வேண்டும். நான்காவது பிரிவுக்கு எம்.பி.ஏ., படிப்பை பினான்ஸ் பிரிவில் முடித்தவர்களும், ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.ஏ., சி.எப்.ஏ., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-ஐ ஓரியண்டல் வங்கியின் சிறப்பு அதிகாரிகள் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.கடைசி நாள்: 2017 ஏப்., 26விபரங்களுக்கு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !