உள்ளூர் செய்திகள்

இந்திய கடலோரக் காவல் படையில் பதவி

நமது நாட்டின் கடலோர எல்லைகளையும், சர்வதேச நீர்வழி எல்லைகளையும் காப்பதில் இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் கடலோரக் காவல் படை முக்கியப் பணியாற்றி வருகிறது. புயல் மற்றும் கடல் சீற்றங்களின் போதும் இந்தப் படை மிகவும் சிறப்பான பணிகளை செய்கிறது. இந்தப் படையில் நாவிக் பிரிவிலான ஜெனரல் டியூடி பணியாளர்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 01.08.1995 முதல் 31.07.1999க்குள் பிறந்தவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.கல்வித் தகுதி: 10+2 என்ட்ரி 02/2017 பாட்ச் பிரிவைச் சார்ந்த கடலோரக் காவல் படையின் ஜெனரல் டியூடி நாவிக் பதவிக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 அளவிலான படிப்பினை குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களைக் கட்டாயம் படித்திருப்பதோடு இதே சதவிகித மதிப்பெண்களைக் குறைந்த பட்சமாக பெற்றிருப்பது தேவைப்படும். தேசிய அளவிலான விளையாட்டுகளில் பங்கேற்றவர்களுக்கு சிறப்புரிமை உள்ளது.இதர விபரங்கள்: வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, மேற்கு, வடமேற்கு, அந்தமான் நிக்கோபார் என்ற ஆறு மண்டலங்களாக பணி நியமனங்கள் பிரிக்கப்பட்டு அந்தந்த மைய தலைமையகத்தில் தேர்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் கிழக்கு மண்டலத்தில் மண்டபம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், சென்னை, புதுச்சேரி, செகந்திராபாத், விசாகப்பட்டினம் ஆகிய மையங்களில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறனறியும் தேர்வு, நேர்காணல், குழுவிவாதம், மருத்துவத் தகுதித் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடைசி நாள்: 22.03.2017விபரங்களுக்கு: http://www.joinindiancoastguard.gov.in/PDF/Advertisement/NAVIKGD_217.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !