பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 அப்ரென்டிஸ் காலியிடங்கள்
பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் பஞ்சாப் 462, டில்லி 417, ராஜஸ்தான் 363, ஹரியானா 348, பீஹார் 310, மஹாராஷ்டிரா 232, ம.பி., 180, ஒடிசா 142, குஜராத் 138, அசாம் 132, தமிழகம் 121 உட்பட மொத்தம் 5138 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 20-28 (1.1.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஸ்டைபண்டு: மாதம் ரூ.15 ஆயிரம் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 944. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 236 கடைசிநாள்: 24.2.2026 விவரங்களுக்கு: pnb.bank.in