இஸ்ரோ ஆய்வு மையத்தில் சயின்டிஸ்ட் வாய்ப்பு
இஸ்ரோ ஆய்வு மையம் கீழ் செயல்படும் திரவ உந்துசக்தி அமைப்பு மையத்தில் (எல்.பி.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சயின்டிஸ்ட் / இன்ஜினியர் பிரிவில் மொத்தம் 6 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18 - 28, 18 - 30 (12.5.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 (ரூ. 500 ரீபன்ட்). எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு (ரூ. 750 ரீபன்ட்). கடைசிநாள்: 12.5.2026 விவரங்களுக்கு: lpsc.gov.in