அழைக்கிறது ரயில் நிறுவனம்
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'ரயில் நில மேம்பாடு ஆணையத்தில்' ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'இன்ஜினியர்' பிரிவில் சிவில் 30, எலக்ட்ரிக்கல் 10 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18-45 (22.5.2026ன் படி) பணிக்காலம்: ஓராண்டு. பணி நீடிப்புக்கு வாய்ப்பு உள்ளது. அனுபவம்: தொடர்புடைய பிரிவில் பணி அனுபவம் அவசியம். தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு ஊதியம்: மாதம் ரூ. 76 ஆயிரம் விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து rlda.indianrailways.gov.in என்ற இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பக்கட்டணம்: இல்லை. கடைசிநாள்: 22.5.2026 விவரங்களுக்கு: rlda.indianrailways.gov.in