யு.பி.எஸ்.சி.,யின் சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அமைச்சகம் சார்ந்த பணியிடங்களைப் பொது எழுத்துத் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நமக்கு தெரிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வுகளை (ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 24 பிரிவுகள்) நடத்துவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 1129 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. முதல் நிலை தேர்வு ஆகஸ்ட் 23ம் தேதி நடக்கிறது.வயது: 01.08.2015 தேதி அன்று 21 வயது நிரம்பியவர்களும், 32 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்தப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது 02.08.1983க்கு பின்னரும், 01.08.1994க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்ச்சி முறை: முதல்நிலை, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற வரிசையில் தேர்ச்சி இருக்கும். விரிவான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் இந்த எழுத்துத் தேர்வை எதிர்கொள்ளலாம்.விண்ணப்பிக்கும் முறை: முதலில் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறியவும். அதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.விண்ணப்பிக்க இறுதி நாள்: 19.06.2015, இணையதள முகவரி: