உள்ளூர் செய்திகள்

யு.பி.எஸ்.சி.,யின் இளநிலை அறிவியல் அதிகாரி பணியறிவிப்பு

இந்தியாவின் மத்திய அரசுப் பணி இடங்களை நிரப்புவதில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு நம் அனைவராலும் அறியப்படுகிறது. டில்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பின் சார்பாக 10 இளநிலை அறிவியல் அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:

யு.பி.எஸ்.சி.,யின் ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக மைக்ரோபயாலஜி பிரிவில் எம்.எஸ்சி., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தாவரவியலில் எம்.எஸ்சி., படிப்பை பிளான்ட் பேதாலஜி, மைக்ரோபயாலஜி, மைக்காலஜி ஆகிய ஏதாவது ஒன்றை சிறப்பு பாடமாக முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.இதே போல் எம்.எஸ்சி.,யில் அக்ரிகல்சர் முடித்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். பிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பை மேற்கண்ட பிரிவு ஏதாவது ஒன்றில் முடித்தவர்கள், பயோ-பெர்டிலைசர்ஸ், ஆர்கானிக் பார்மிங் ஆகியவற்றில் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை உள்ளது.

மற்றவை:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.25/-ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையிலோ அல்லது நெட் பேங்கிங் முறையிலோ செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டை தவறாமல் அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள்:

31.01.2013

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்:

04.02.2013

இணையதள முகவரி:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்